samedi 15 février 2014

பேஸ்புக் வலைத்தளத்தில் கணக்கு தொடங்கிய சிரியா பெண் கல்லால் அடித்து கொலை

சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவோர் அதிகரித்து வரும் நிலையில் அதை எதிர்ப்பாளர்களும் இருக்கவே செய்கிறார்கள். அதிலும், சில அடிப்படைவாத இயக்கங்கள் அவற்றுக்குத் தடையும் விதித்துள்ளன. இந்நிலையில் சிரியாவில் பேஸ்புக் கணக்கு தொடங்கியதற்காக பெண் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.
சிரியாவின் ராக்கா சிட்டியை சேர்ந்த பெண் அல் ஜஸ்ஸிம். அவர் பேஸ்புக் வலைத்தளத்தில் சமீபத்தில் கணக்கைத் தொடங்கினார்ர். அது குற்றமாக கூறப்பட்டு ஜஸ்ஸிம் இஸ்லாமிக் தீவிரவாதிகளால் அல்-ரெக்வா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது தீர்ப்பு அளித்த நீதிமன்றம் பெண்ணை கல்லால் அடித்து கொலை செய்ய உத்தரவிட்டது. இதனை அடுத்து அவருக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. பேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் கணக்கு வைத்திருப்பது, முறையற்ற பாலியல் குற்றங்களுக்கு வழிவகுக்கும் என்று மரண தண்டனைக்கான காரணமாகச் சொல்லப்பட்டது.இந்த சம்பவம் காரணமாக சிரிய நாட்டு பெண்களிடையே கடும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.உலகம் முழுவதும் ஃபேஸ்புக்கில் கோடிக்கணக்கான பெண்கள் கணக்கை வைத்துள்ளனர் ஆனால் சிரியாவில் மாத்திரம் இம்மாதிரியான சட்டம் உள்ளதை பல நாடுகள் கண்டனம் செய்து வருகிறது.

Aucun commentaire:

Enregistrer un commentaire