samedi 8 février 2014

சர்வதேச விசாரணையா? ஐ.நா. பதில்

போர்க் குற்றம் தொடர்பாக இலங்கைக்கு எதிராக சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டுமா என்பது குறித்து தனது உறுப்பு நாடுகள்தான் முடிவு செய்ய வேண்டும் என்று ஐ.நா. சபை தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசுகையில் ஐ.நா. செய்தித் தொடர்பாளர் பர்ஹான் ஹாக் கூறியதாவது:
போர்க் குற்றத்தில் தொடர்புடையவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதே ஐ.நா.வின் நிலைப்பாடு. இருப்பினும் அடுத்து என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது குறித்து உறுப்பு நாடுகளின் கருத்தை பொறுத்தே ஐ.நா. முடிவு செய்யும் என்று ஹாக் கூறினார்.
விடுதலைப்புலிகளுக்கு எதிரான கடைசி கட்டப்போரின்போது, அப்பாவி தமிழர்களை கொன்று குவித்ததாகவும், மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாகவும் இலங்கை மீது குற்றம்சாட்டப்பட்டு வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாக ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் இலங்கைக்கு எதிராக 2 முறை அமெரிக்கா தீர்மானம் கொண்டு வந்தது. அதை இந்தியா ஆதரித்தது.
போர்க்குற்றம் தொடர்பாக இலங்கைக்கு எதிராக சர்வதேச விசாரணைக் கோரி ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் அடுத்த மாதம் 3வது முறையாக தீர்மானம் கொண்டு வரப்போவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

Aucun commentaire:

Enregistrer un commentaire