mercredi 5 février 2014

தலைமை நிர்வாக அதிகாரியாக இந்தியர் நியமனம்!பதவியை இராஜினாமா செய்தார் பில்கேட்ஸ்:

சிறுவயதில் இருந்து கணினி மென்பொருள் துறையில் சுய விடாமுயர்ச்சியினால் முன்னேறி வெற்றி வாகை சூடி உலகக் கோடீஸ்வரர் எனப் பெயர்பெற்ற மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் அதிபர் பில்கேட்ஸ் தனது பதவியை இன்று இராஜினாமா செய்தார். இதேவேளை மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக இந்தியாவைச் சேர்ந்த சத்யா நடேலா என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
 
உலகின் மிகப்பெரிய மென்பொருள் நிறுவனமான மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக கடமையாற்றிய ஸ்டீவ் போல்மர் கடந்த ஆகஸ்ட் மாதம் ஓய்வு பெற்றார். இதனையடுத்து அப்பதவிக்கான நபரை தேர்வு செய்ய மைக்ரோசொப்ட் நிறுவனம் ஒரு சிறப்புக்குழுவை அமைத்தது.
 
இதனையடுத்து தலைமை நிர்வாக அதிகாரி பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவோர் பட்டியலில் சத்யா சத்யா நடேலா , விக் குண்டோத்ரா ஆகிய இந்தியர்கள் உட்பட 9 பேர் உள்ளடக்கப்பட்டிருந்தனர். இதில், அனுபவம் மிக்க அதிகாரியாக இருந்த சத்யாவை புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக தேர்வு செய்து நியமித்திருப்பதாக மைக்ரோசொப்ட் நிறுவனம் அறிவித்துள்ளது.
 
 
இதேவேளை  மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பதவியிலிருந்து இராஜினாமா செய்வதாக அறிவித்த பில் கேட்ஸ் நிறுவனத்தின் தொழில்நுட்ப ஆலோசகராக தன் பணியை தொடர உள்ளதாகவும் அறிவித்துள்ளார். 
 
நிறுவனத்தின் 38 ஆண்டு கால வரலாற்றில் போல்மர் மற்றும் நிறுவனர் பில் கேட்ஸ் ஆகியோரைத் தொடர்ந்து சத்யா மூன்றாவது தலைமை நிர்வாக அதிகாரியாக பொறுப்பேற்க உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Aucun commentaire:

Enregistrer un commentaire