dimanche 9 février 2014

இந்த ரி.என்.ஏ அரசியல்வாதிகள் யுத்தத்தை இராணுவத் தளபதிக்கு வாக்களித்துவிட்டு வேடிக்கையாகவும் இருக்கிறது; தயான் ஜயதிலகா

உண்மையில் எல்.ரீ.ரீ.ஈ.யை தோற்கடித்து அதன் தலையை கொய்வதற்கு தலைமை தாங்கியவர் ஜனாதிபதி ராஜபக்ஸ, - இதற்காக ரி.என்.ஏ தீவிரவாதிகள் அவரை ஒருபோதும் மன்னிக்கப் போவதில்லை. இந்த ரி.என்.ஏ அரசியல்வாதிகள் யுத்தத்தை  அதன் கொடிய இறுதிக் கட்டத்தில் முன்னின்று நடத்திய இராணுவத் தளபதிக்கு வாக்களித்துவிட்டு, அப்போது நடத்தப்பட்டதாகக் கூறப்படும்  போர்க் குற்றங்களுக்காக சர்வதேச விசாரணைக்கு அழைப்பு விடுப்பதை பார்க்கும்போது சிறிது வேடிக்கையாகவும் இருக்கிறது.
C.V.Vigneswaran-1முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் ஸ்ரீலங்கா அரசாங்கத்திடம் ஒரு கேள்வியை தொடுத்துள்ளார், “ஸ்ரீலங்கா அரசாங்கம் போர்க்குற்றம் எதுவும் செய்யவில்லை என்றால், ஒரு சர்வதேச விசாரணையை அவர்கள் எதிர்ப்பது ஏன்?” என்பதுதான் ‘த இந்து’ பத்திரிகையில் அவர் கேட்டிருக்கும் அந்தக் கேள்வி. இப்போது மோசமான தந்திரமுள்ள அந்தக் கேள்வியில் “நீங்கள் உங்கள் மனைவியை அடிப்பதை நிறுத்திவிட்டீர்களா?” எனக் கேட்கும் அதே நகைப்புக்கிடமான தர்க்கம் அடங்கியுள்ளது. இந்தக் கேள்விக்கு ஒருவர் ஆம் எனப் பதிலளித்தால், அத்தகைய நடவடிக்கைகளில் உண்மையிலேயே ஈடுபட்டிராத ஒருவர்கூட, கடந்த காலங்களில் தனது மனைவியை அடித்ததை ஒப்புக்கொண்டது போலாகிவிடும். அத்தகைய செயலை ஒருபோதும் செய்திராத ஒருவர் இல்லை என்கிற பதிலைக் கூறுவாராhனால், அவர் இன்னமும் தனது மனைவியை அடித்து துன்புறுத்திக் கொண்டிருக்கிறார் என்பதை ஒப்புக்கொள்வதற்கான சாத்தியத்தை ஏற்படுத்திவிடும்.
நல்லவரான முதலமைச்சர் “ எல்.ரீ.ரீ.ஈ க்கு எதிரான இராணுவ நடவடிக்கையின்போது நடத்தப் பட்டதாக  சொல்லப்படும் போர்க்குற்றங்கள் பற்றி ஒரு சர்வதேச விசாரணைக்கு அழைப்பு விடும் வட மாகாணசபையின் தீர்மானம் ஸ்ரீலங்காவின் வட பகுதியில் உள்ள தமிழ் மக்களின் உணர்வுகளை மட்டும் எதிரொலிக்கிறது” என்று கூறுகிறார். அதிலும் ஒரு சிறிய சிக்கல் உள்ளது. ஜேர்மனிய மக்களில் பெரும்பாலனோர் நாஸிகளுக்கும் மற்றும் ஹிட்லருக்கும் ஆதரவளித்து நடந்த போரில் தோல்வியடைந்து ஐந்து வருடங்களின் பின் டிரஸ்டென் மீது குண்டுத் தாக்குதல் நடத்தியதற்காக ஒரு சர்வதேச விசாரணைக்கு அழைப்பு விடுத்தால் என்று கற்பனை செய்து பாருங்கள். நிச்சயமாக ஜேர்மனிய மக்கள் அப்படியான ஒரு செயலைச் செய்யவில்லை. அவர்கள் அப்படிச் செய்திருந்தாலோ அல்லது உண்மையில் ஜப்பானிய மக்கள் ஹிரோஷிமா மற்றும் நாகசக்கி மீதான அணுக்குண்டு தாக்குதலை எதிர்த்து அந்த போர்க்குற்றம் இழைக்கப்பட்ட ஐந்து வருடங்களின் பின் ஒரு சர்வதேச விசாரணையை கோரியிருந்தால், வெற்றி பெற்ற அணி மற்றும் சர்வதேச சமூகம் என்பனவற்றின் பதில் என்னவாக இருநதிருக்கும் என்று ஒருவரால் கற்பனை செய்ய முடியும்.
அமெரிக்க அரசியல் என்னும் ஒரு இணையத்தளம் ஈ.ஐ.என் பிரஸ்வயர் எனும் வலைத் தளத்திலிருந்து பெறப்பட்ட ஒரு ஆக்கத்தை வெளியிட்டுள்ளது. வட மாகாணசபையில் இந்த தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டதற்கான உண்மையான முக்கியத்துவத்தை தொகுத்து ஒரு அருமையான ஆக்கத்தை அது வழங்கியுள்ளது.
“ தீவில் வாழும் தமிழ் மக்களின் மனித நேயத்துக்கு எதிராக ஸ்ரீலங்கா தலைவர்கள் புரிந்த  இனப் படுகொலை, போர்க் குற்றங்கள் மற்றும் மானிடத்துக்கு எதிரான குற்றங்கள் என்பனவற்றை விசாரணை செய்ய ஐக்கிய நாடுகள் சபை, ஒரு சர்வதேச போர்க்குற்ற விசாரணை மன்றத்தை நிறுவ வேண்டும் என்கிற ஒரு தீர்மானத்தை ஸ்ரீலங்காவின் வட மாகாணசபை ஏகமனதாக நிறைவேற்றியிருப்பது, ஸ்ரீலங்கா ஜனாதிபதிக்கு ஒரு பெரிய அவமானம்.
இதுவரை சர்வதேச விசாரணையை நிறுவும்படி கோரும் அழைப்புகள் சர்வதேச தொண்டு நிறுவனங்கள்,மற்றும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் போன்ற புலம்பெயர் அமைப்புகள் என்பனவற்றிடம் இருந்துதான் விடுக்கப்பட்டு வந்துள்ளன. இதுதான் முதல் தடவையாக ஸ்ரீலங்காவிற்குள் இருக்கும் தமிழர்கள், தங்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள் ஊடாக அப்படியான ஒரு விசாரணைக்கு அழைப்பு விடுத்துள்ளார்கள்.
ஐநா மனித உரிமைகள் சபையின் அடுத்த அமர்வு மார்ச் மாதம் ஆரம்பமாக உள்ளதுடன், ஸ்ரீலங்காமீது ஒரு சர்வதேச விசாரணைக்கு அழைப்பு விடுக்கும் தீhமானம் ஒன்று அமெரிக்காவினால் தாக்கல் செய்யப்படலாம் என்றும் எதிர்பார்க்கப் படுகிறது. வட மாகாணசபையினால் முன்மொழியப்பட்டுள்ள தீர்மானம், சர்வதேச விசாரணைக்கு அழைப்பு விடுக்கும் ஐநா தீர்மானம் ஒன்று நிறைவேற்றப் படுவதில் சாதகமான பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும் எனப் பரவலாக நம்பப்  படுகிறது”.Slaarmy-srilanka
(ஸ்ரீலங்காவின் சொந்த வட மாகாணசபை, ஸ்ரீலங்கா தலைவர்களுக்கு எதிராக சர்வதேச விசாரணைக்கு அழைப்பு விடுத்துள்ளது - யுஎஸ்பொலிட்டிக்ஸ்.ஈஐஎன்நியுஸ்.கொம்)
எனவே வடக்கு தமிழ் மாகாணசபை அங்கத்தவர்கள்,வடக்கு மாகாணசபைக்கான முதலாவது மாகாணத் தேர்தலை நடத்திய ஜனாதிபதி அவர்களுக்கு பெரிய அவமானத்தை ஏற்படுத்தியுள்ளார்கள் (1988ல் வடக்கு மற்றும் கிழக்கு என்பன இணைந்திருந்தாலும் வடக்கைத் தவிர்த்து கிழக்கில் மட்டுமே தேர்தல் நடைபெற்றது).பாரிய இராணுவ பிரசன்னம் இருந்த ஒரு மாகாணத்தில், தேர்தல் போதியளவு சுதந்திரமாகவும் நியாயமாகவும் நடைபெற்றதன் காரணமாக எதிர்க் கட்சியை சேர்ந்த தமிழ் தேசியவாதிகளுக்கு தேர்தலில் பெரிய வெற்றியை பெறமுடிந்தது. சக்திமிக்க பாதுகாப்புச் செயலாளரான ஜனாதிபதியின் சகோதரரிடமிருந்து பகிரங்கமான எதிர்ப்பு வெளியானபோதிலும் சிங்கள பௌத்த கடும்போக்காளர்களின் வீதி எதிர்ப்பு போராட்டங்கள் எதுவுமின்றி ஜனாதிபதியினால் வடக்கு மாகாணசபையை வெற்றிகரமாக அமைக்க இயலுமாக இருந்தது.
உண்மையில் எல்.ரீ.ரீ.ஈ.யை தோற்கடித்து அதன் தலையை கொய்வதற்கு தலைமை தாங்கியவர் ஜனாதிபதி ராஜபக்ஸ, - இதற்காக ரி.என்.ஏ தீவிரவாதிகள் அவரை ஒருபோதும் மன்னிக்கப் போவதில்லை. இந்த ரி.என்.ஏ அரசியல்வாதிகள் யுத்தத்தை  அதன் கொடிய இறுதிக் கட்டத்தில் முன்னின்று நடத்திய இராணுவத் தளபதிக்கு வாக்களித்துவிட்டு, அப்போது நடத்தப்பட்டதாகக் கூறப்படும்  போர்க் குற்றங்களுக்காக சர்வதேச விசாரணைக்கு அழைப்பு விடுப்பதை பார்க்கும்போது சிறிது வேடிக்கையாகவும் இருக்கிறது.
ஐரிஸ் குடியரசின் சின்பெயின்  அங்கு குழப்பங்கள் நடந்தபோது பிரித்தானிய துருப்புகள் மற்றும் அதிகாரிகள் இழைத்த குற்றங்களுக்காக ஒருபோதும் ஒரு சர்வதேச விசாரணைக்கு அழைப்பு விடுக்காததுக்கு ஒரு காரணம் இருந்தது. வட மாகாணசபையின் தீர்மானம் அந்தச் சபையை நிறுவுவதற்கான பாதையை திறந்துவிட்ட ஜனாதிபதியின் கரங்களை பலப்படுத்துவதாக மற்றும் ஊக்கப் படுத்துவதாக இல்லை. அது ஆளும் கூட்டணிக்குள் இருக்கும் அதிகாரப் பரவலாக்கத்துக்கு சார்பான முற்போக்குவாதிகளையும் பலவீனப்படுத்துவதாக உள்ளது, அவர்கள் 13வது திருத்தத்தை பாதுகாப்பதற்காக பெரும்பான்மை பேரினவாதிகளுடன் வெற்றிகரமாகப் போராடி தேர்தல்களை நடைபெறச் செய்தார்கள்.
மறுபக்கத்தில் வட மாகாணசபையின் தீர்மானம் மாகாணசபை முறையை எதிர்ப்பதுடன் அதை நீக்கவேண்டும் என்றும் போராடும் முக்கிய சிங்கள கடும்போக்குவாதிகளின் கோரிக்கைக்கு வலுச் சேர்ப்பதாகவும் அமைகிறது. அதிகாரப் பகிர்வு மேலும் விரிவடையக்கூடாது,மற்றும் 13வது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப் படுத்துவது ஆபத்தானது என்கிற அவர்களின் வாதத்தையும் அது பலப்படுத்துகிறது. வட மாகாணசபையின் தீவிரவாதத் தீர்மானத்தின் பின்னர் இத்தகைய சாகசத் தன்மை கொண்ட மாகாணசபைக்கு மேலும் அதிகாரங்களை பரவலாக்குவதற்கு முரட்டுத் தன்மையான விவாதங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும், -  சிங்கள சொல்வழக்கின்படி குரங்கின் கையில் நேராக ஒரு சவரக்கத்தியை கொடுப்பதற்கு ஒப்பானதாக இருக்கும்.
நாட்டின் சக்திவாய்ந்ததும் மற்றும் பிரபலமானதுமான இராணுவ நிலைகளைப் பற்றி தீர்மானம் எதுவும் சொல்லாததால், வடக்கு மாகாணசபையின் அதிகாரத்தை பரவலாக்குவதால் அது நாட்டின் பாதுகாப்பு நலன்களுக்கு அச்சுறுத்தலை உண்டாக்காது. இது ரி.என்.ஏயினை நடைமுறைக்கேற்ற ஒரு சமாதானப் பங்காளியாக கருதுவது மிகவும் கடினமானது மற்றும் ஜனநாயக நீரோட்டத்தில் வட மாகாணசபையை ஒருங்கிணைப்பது போன்றவை கடினமானது என்பதைக் காட்டுகின்றன.
கட்சி அரசியல் அனுதாபங்களைக் கடந்து இந்தப் பிரேரணை பெரும்பாலான சிங்களவர்கள் மத்தியில் நிச்சயமாக கடுமையான எண்ணங்களை தோற்றுவிப்பதுடன் அதிகாரப் பகிர்வுக்கான அதிக அனுதாபங்கள் ஏற்படுவதுக்குப் பதிலாக அதைக் குறைவடையச் செய்யும். வட மாகாணசபை தீர்மானத்தின் எதிரொலியாக உறுதிப்படுத்தப்பட்ட அறிக்கை ஒன்று திரு. சம்பந்தன் அவர்களால், திருகோணமலை பாராளுமன்ற உறுப்பினர் , ரி.என்.ஏ யின் தலைவர் மற்றும் இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் என்கிற மூன்று தகுதிகளின் அடிப்படையில் கையொப்பமிட்டு வெளியிடப் பட்டுள்ளது. அது தெரிவிப்பது என்னவென்றால், 2014, ஜனவரி 26ல் திருகோணமலை நகர மண்டபத்தில் நடைபெற்ற இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக்கூட்டத்தில்,வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் அனைத்து மாவட்டப் பிரதிநிதிகளும் கலந்து கொண்டார்கள், இதில் ஏனைய விடயங்களுக்கு மத்தியில் “ஒரு ….சர்வதேச விசாரணை மிகவும் முக்கியம்’ என ஒருமனதாக தீர்மானிக்கப்பட்டது.
(கொழும்புடெலிகிராப்.கொம் - தமிழ் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார்கள் - ஐரிஏகே - ஏகமனதாக தீர்மானம்)
வட மாகாணசபை தீர்மானம் மற்றும் இலங்கை தமிழரசுக் கட்சியின் அறிக்கை என்பன, வெளிப்படுத்தியுள்ள ரி.என்.ஏ  கதிரியக்கம் தெற்கின் எதிர்கட்சி ஏதாவது ரி.என்.ஏ உடன் கூட்டு வைத்திருந்தும் அதன் சொல்லாட்சியை கட்டுப்படுத்த தவறியுள்ளதனால் சிங்கள வாக்காளர்களால் தண்டிக்கப்படப் போகிறது என்பதையே  காட்டுகிறது. இதன்படி ரி.என்.ஏ மற்றும் வட மாகாணசபை என்பன ஜெனிவாவின் உணர்வுபூர்வமான ஓட்டத்தில் நிற்பதற்காக எடுத்துள்ள முடிவினால் தென் பகுதியில் உள்ள ஜனநாயக மற்றும் மிதவாதிகள் மத்தியிலுள்ள அதன் முக்கிய பங்காளிகளுக்கு குழி பறித்துள்ளது. தீவு முழுவதையும் ஒரு முழு அமைப்பாக எடுத்தால் அதிகாரப் பகிர்வுக்கு சார்பாகவுள்ள அரசியலமைப்பு, ரி.என்.ஏ - வட மாகாணசபை தேர்தல் மற்றம் அதற்குப் பின்னான சொல்லாட்சி காரணமாக விரிவடைதற்குப் பதிலாக சுருங்கிப் போயுள்ளது.
வட மாகாணசபை தீர்மானத்தை மிதவாத அடிப்படையின் எந்த உணர்விலும் விளக்க முடியாது. மிதவாத நடத்தையுள்ள ஒரு அரசியல் கட்சியின் அரசியல் நடத்தை இதுவல்ல. எதிர் வாதமாக சொல்வதானால் இந்த நடவடிக்கை, வட மாகாணசபைக்கு அதிகாரத்தை பரவலாக்குவதற்கான அரசாங்கத்தின் முயற்சிக்கு இதன்மூலம் கிட்டியுள்ள ஒரு எதிர்வினை, ரி.என்.ஏ, எல்.எல்.ஆர்.சி அறிக்கையை விமர்சித்து வெளியிட்டுள்ள 100 பக்க அறிக்கையில் அந்தப் பொய்யும் உள்ளது. அந்த விமர்சனத்தில் முன் தேதியிட்ட வட மாகாணசபையின் மறுசீரமைப்பு முன்னாள் இராணுவ ஆளுனர் பிரச்சினை போன்றவையும் உள்ளன.
வட மாகாணசபை - ரி.என்.ஏ என்பன ஸ்ரீலங்கா ஓரு அரசாங்கம், ஒரு நாடு என்றவகையில் அதற்கு எதிரான தேசிய விரோத செயல்களில் ஈடுபடுவது அதிகரித்து வருவதைப் போல தோன்றுகிறது. மகிந்த  ராஜபக்ஸ வரலாற்று நகர்வாக வட மாகாணசபை தேர்தலை தற்போதுள்ள 13வது திருத்தத்தின் கீழேயே(சிங்கள கடும்போக்குவாதிகளின் கோரிக்கைகளை நிராகரித்து) நடத்தியதற்கு பிரதியாக ரி.என்.ஏ தேர்தல் பிரச்சாரங்களில் பிரபாகரனைப் புகழ்ந்தும் மற்றும் ரி.என்.ஏ செய்தித் தாள்களில் முதல் பக்கத்தில் அவரது படத்தைப் போட்டும் முரணாக நடந்துள்ளது.
அது புதிதாகத் தோந்தெடுக்கப்பட்ட வட மாகாணசபைக்கு அரசாங்கம் அதிகாரத்தை பகிருமா இல்லையா என்கிற ஒரு முடிவுக்கு வருவதற்கு முன்பு நடந்தது. இதன்படி ரி.என்.ஏ - வட மாகாணசபை தீவிரவாதம், தேர்தலுக்கு பின் அரசாங்கத்தின் அசைவின்மை காரணமாக இயற்கையாகவே ஏற்பட்ட ஒரு தாக்கம் என விளக்கமளித்து ஒதுக்கிவிட முடியாது.
வடக்கு - தெற்கு பிரிவு ஒரு பெரிய வளைகுடாவாக வளரப்போகிறது, இதற்காக வட மாகாணசபை தீர்மானத்துக்கு நன்றி சொல்லவேண்டும். இனப்பிரச்சினையின் முனைவாக்கத்தின் இயக்கம் தீவின் அரசியலில் ஒரு  வெற்றி தோல்வி பூச்சியமாக இருக்கும் ஒரு விளையாட்டாக இருக்கப் போகிறது, எங்கள் நண்பர்களான ஜப்பான்,தென்னாபிரிக்கா,எல்லாவற்றிலும் மேலாக எங்கள் அயல் நாடான இந்தியா என்பன செய்யப்போகும் பணியை மிகவும் கடினமாக்கியுள்ளது. பாதகாப்பானதும் மற்றும் நிலையான சமாதானம் கடந்த வாரம் வட மாகாணசபை தீர்மானம் நிறைவேற்றியபின் முன்பிருந்ததை விட இன்னும் அதிக தூரம் சென்றுவிட்டது.                              தேனீ மொழிபெயர்ப்பு: எஸ்.குமார்

Aucun commentaire:

Enregistrer un commentaire