mercredi 19 février 2014

இந்தியாவில் புதிய மாநிலம் மக்கள் வெற்றிக் கொண்டாட்டத்தில்

தெலங்கானா மசோதா நிறைவேற்றிய பின் நாடாளுமன்றத்துக்கு வெளியே தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்திய தெலஅமைச்சர்கள் உள்பட சீமாந்திரா பகுதி எம்.பி.க்களின் கடும் எதிர்ப்புக்கு இடையே மக்களவையில் இன்று (செவ்வாய்க்கிழமை) வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தெலங்கானா மசோதா நிறைவேற்றப்பட்டது.
'பெப்பர் ஸ்பிரே' அடிப்பு நிகழ்வின் எதிரொலியாக, தெலங்கானா மசோதா நிறைவேற்றப்பட்டபோது, அவையின் நடவடிக்கைகள் தொலைக்காட்சியில் நேரலையில் ஒளிபரப்பப்படவில்லை.
சில திருத்தங்களுடன், முக்கிய எதிர்க்கட்சியான பாஜகவின் ஆதரவுடன், குரல் வாக்கெடுப்பு மூலம் 'ஆந்திர மாநில மறுசீராய்வு மசோதா 2014' நிறைவேற்றப்பட்டது.
அதேவேளையில், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் முன்வைத்த திருத்தங்கள் ஏற்றுக்கொள்ளப்படவில்லை.
இம்மசோதாவைத் தாக்கல் செய்த மத்திய உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே, சீமாந்திராப் பகுதிக்கு சிறப்பு நிதித் திட்டம் அளிக்கப்படும் என்று தெரிவித்தார்.
தெலங்கானா மசோதா மீது விவாதம் தொடங்கியது முதல் நிறைவேற்றப்பட்டது வரையிலால் 90 நிமிடங்களுக்கு லோக்சபா தொலைக்காட்சியில் அவை நடவடிக்கைகள் ஒளிபரப்பப்படவில்லை.
சீமாந்திராவைச் சேர்ந்த உறுப்பினர்கள் பலரும் நாட்டின் ஜனநாயகத்தில் இது ஒரு கருப்பு தினம் என்றும், ஜனநாயகக் கொள்கைகளுக்கு விரோதமானது என்றும் கடுமையாக சாடி, அமளியில் ஈடுபட்டனர்.
இந்த மசோதா மீது நடந்த மிகக் குறுகிய அளவிலான விவாதத்தில், எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா ஸ்வராஜ், ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த தெலங்கானா ஆதரவு அமைச்சர் ஜெய்பால் ரெட்டி ஆகியோர் மட்டுமே பேசினர்.

ஜனநாயக வரலாற்றில் இது ஒரு கருப்பு தினம் என்று வருணித்துள்ள ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜகன்மோகன் ரெட்டி, ஆந்திராவில் நாளை முழு அடைப்புப் போராட்டத்தை அறிவித்துள்ளார். அதேவேளையில், ஆந்திரத்தின் தெலங்கானா பகுதி மக்கள் வெற்றிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.ங்கானா எம்.பி. விஜயசாந்தி. (படம்: ராஜீவ் பட்)

Aucun commentaire:

Enregistrer un commentaire