samedi 15 février 2014

கருணை கொலை செய்யலாம் – பெல்ஜியப் பாராளுமன்றம்

Tan-Yee-Hooi_sநோயுற்று உயிரிழக்கும் தறுவாயிலுள்ள பிள்ளைகளை வயதை கருதாது கருணைக் கொலை செய்வதற்கு பெல்ஜியப் பாராளுமன்றம் அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதுகுறித்த சட்டமூலத்தை நிறைவேற்றுவதற்காக நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் 86 பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவாகவும், 44 பாராளுமன்ற உறுப்பினர்கள் எதிராகவும் வாக்களித்தனர். 12 பேர் வாக்கெடுப்பிலிலிருந்து கலந்துகொள்ளாது இருந்தனர்.
12 வருடங்களின் பின்னர் வயதெல்லை கருதாது உயிரிழக்கும் தறுவாயில் உடல் உவாதைக்கு உட்படும் பிள்ளைகளை மாத்திரமே கருணைக் கொலை செய்யமுடியும் என்பதுடன், அதற்கு பெற்றோரின் அனுமதி பெறப்பட வேண்டும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த சட்டமூலத்தில் மன்னர் கையெழுத்திட்ட பின்னர் அது சட்டமாக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வயதெல்லையை கருத்திற் கொள்ளாமல் கருணை கொலையை அனுமதிக்கும் உலகின் முதலாவது நாடாகப் பெல்ஜியம் பதிவாகியுள்ளது.

Aucun commentaire:

Enregistrer un commentaire