vendredi 14 février 2014

பயந்து எந்தவொரு தருணத்திலும் நாட்டைக் காட்டிக் கொடுக்க மாட்டோம்;கோத்தபாய ராஜபக்ஷ

சர்வதேச விசாரணைகளுக்கு பயந்து எந்தவொரு தருணத்திலும் நாட்டைக் காட்டிக் கொடுக்க மாட்டோம் என்று பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராக தீர்மானத்தைக் கொண்டுவந்து பொம்மை ஆட்சியொன்றை உருவாக்குவதே சர்வதேசத்தின் நோக்கம். அப்படியான நோக்கங்களுக்கு வாய்ப்பு வழங்கப்படாது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு பேசும் போதே கோத்தபாய ராஜபக்ஷ மேற்கண்ட விடயங்களைக் கூறியுள்ளார்.

இலங்கையின் அனைத்து மாகாணங்களுக்கும் வழங்கப்பட்டுள்ள அதிகாரம் போன்றே வடக்கு மாகாணத்திற்கும் வழங்கப்பட்டிருக்கிறது. அப்படியிருக்கும் போது, வடக்கு மாகாணத்தை அரசாங்கம் அடக்கியாள்வது போல சித்தரிப்பது தவறானது என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Aucun commentaire:

Enregistrer un commentaire