jeudi 27 février 2014

ஊடகங்களின் மூலம் இனி புரட்சிகளை ஆட்சி மாற்றங்களை நடத்த முடியும் .இது தகவல் யுகம். நாம் இனிப் பின்னோக்கிச் சென்று வாழமுடியாது.

facebookஇது தகவல் யுகம் என்கிறார்கள். ஊடகங்களின் மூலம் இனி புரட்சிகளை ஆட்சி மாற்றங்களை நடத்த முடியும் என்கிறார்கள். டுனீசியாவில் ஆரம்பித்து இப்போது உக்ரைன் அதிபர் தப்பியோடியிருப்பது வரை உதாரணம் சொல்கிறார்கள்.
சமூக வலைத்தளங்கள் மக்களை ஒருங்குதிரட்டுவதில் பாரிய பங்களிப்பினை நல்கி வருவது ஒருபுறம் நடந்தாலும், பாதகமான செய்திகளும் அவ்வப்போது தலைகாட்டுகின்றன. ஃபேஸ்புக்கால் சமீப காலத்தில் மூன்றாவது உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக நேற்று ஒரு செய்தி வெளியாகியிருக்கிறது.
க.பொ.த. சாதாரண தரத்தில் படித்த 16 வயது மாணவியொருவரே பிந்தியதாகத் தற்கொலை செய்துகொண்டவராவார். காதல் மறுக்கப்படுதலே காரணமாய் அமைந்திருக்கிறது. மக்களை இணைக்கின்ற ஊடகம், சிலரது வாழ்வைப் பிரித்துவிடவும் காரணமாவது துர்ப்பாக்கியமானதுதான்.
இதற்காக, உலகத்தை ஒரு கிராமமாகச் சுருங்கச் செய்துவருகிற ஊடகப் பெருக்கத்தையும், கண்டுபிடிப்புகளின் வளர்ச்சியையும் நிறுத்திவைத்துவிட முடியாது. மனிதர்களுக்கு எப்போதும் முன்னோக்கிய பாய்ச்சல்தான். மலரும் பழைய நினைவுகள் இனிக்கின்றன என்பதற்காக நாம் இனிப் பின்னோக்கிச் சென்று வாழமுடியாது.

Aucun commentaire:

Enregistrer un commentaire