samedi 1 février 2014

இலங்கை சீனாவை நம்பியது பெரும் ஏமாற்றமளிக்கிறது

 இலங்கை: சீனாவை நம்பியது பெரும் ஏமாற்றமளிக்கிறது என்று  இலங்கையின் எரிசக்தித் துறை அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி சீனா மீது குறை கூறியிருக்கிறார்.
இலங்கை, நுரைச்சோரையில் சீனாவால் நிறுவப்பட்ட 300 மெகாவாட் அனல் மின் உற்பத்தி நிலையம் உள்ளது. சீனா, 25 வருட உத்தரவாதத்தின் அடிப்படையில் இங்கு மின் உற்பத்தி நிலையத்தை அமைத்தது. ஆனால், ஆரம்பிக்கப்பட்ட 3 ஆண்டுகளில் 250க்கும் மேற்பட்ட நாட்கள் பழுதாகி, அடிக்கடி இயங்காமல் இருந்த இம்மின் உற்பத்தி நிலையம் இப்போது முழுமையாக பழுதடைந்து விட்டது.
இதன் காரணமாக, இலங்கை அரசு தனியாரிடமிருந்து அதிக விலை கொடுத்து மின்சாரத்தை வாங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதனால், இலங்கையில் கடுமையான மின் தட்டுப்பாடோடு மின் கட்டணமும் உயர்ந்து விட்டது. வீடுகளுக்கு வழங்கப்படும் ஒரு யூனிட் மின்சாரத்தின் விலையே 22 ரூபாய் ஆகும்.  
எனவே, இது தொடர்பாக கருத்து தெரிவித்த இலங்கை அமைச்சர் பவித்ரா, "குறைந்தது 25 ஆண்டுகள் செயல்படும் என்று நினைத்தோம். ஆனால், நிறுவப்பட்ட 3 ஆண்டுகளிலே பழுதாகி முழுமையாக நின்று விட்டது. இதனால் இலங்கையில் மின்சாரத் தட்டுபாடு ஏற்பட்டுள்ளது. இதற்கு சீன அரசாங்கமே பொறுப்பு. சீனாவை நம்பியது பெரும் ஏமாற்றமளிக்கிறது" என்றார்.  
உலகிலேயே இலங்கையில் தான் மின் கட்டணம் அதிகமாக வசூலிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Aucun commentaire:

Enregistrer un commentaire