jeudi 1 novembre 2012

13ம் திருத்தச் சட்டத்தை அமுல்படுத்துமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒருபோதும் கோரவில்லை அரியநேத்திரன்


13ம் திருத்தச் சட்டத்தை நாம் ஏற்றுக்கொள்ளவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் பீ. அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.
13ம் திருத்தச் சட்டத்தை அமுல்படுத்துமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒருபோதும் கோரவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஐக்கிய இலங்கைக்குள் வடக்கு கிழக்கில் சுயாட்சி அதிகாரங்களுடன் கூடிய உரிமைகள் தமிழ் மக்களுக்கு வழங்கப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
13ம் திருத்தச் சட்டத்தின் ஊடாக குறித்தத் தேவைகள் பூர்த்தி செய்யப்பட மாட்டாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.19ம் திருத்தச் சட்டமொன்றின் மூலம் இந்தக் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டால் அதனை ஏற்றுக்கொள்ளத் தயார் என அரியநேத்திரன் தெரிவித்துள்ளார் இதே த.தே.கூ இலங்கை சுதந்திரம் அடைந்து 64 ஆண்டுகளைக் கடந்து கொண்டிருக்கிற இன்று வரை தமிழரசு என்றும், சமஸ்டி என்றும், தமிழ் ஈழம் என்றும் வெவ்வேறு முகங்களில் தோன்றி மக்களை ஏமாற்றியுள்ளனர். இவர்களின் இப்படியான பல முகங்களை மக்கள் அறிவார்கள். .அதாவது இலங்கையில் தற்பொழுது வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழ் மக்கள் யாருக்கு வாக்களிக்கிறார்கள் என்பதை சர்வதேசம் உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருப்பதாகவும்,இதே த.தே.கூ கூறூகிறது ........13ம் திருத்தச் சட்டத்தை இலங்கை அரசுடன் புலிகள் கூட்டு முயற்சியோடு 13ம் திருத்தச் சட்டத்தை அழிக்க நினைத்த அதே தோடர்ச்சியே புலம்பெயர் தமிழ் மக்களின் ஆதரவை நாடியுள்ளனர்.அரியநேத்திரன் ஐக்கிய இலங்கைக்குள் வடக்கு கிழக்கில் சுயாட்சி அதிகாரங்களுடன் கூடிய உரிமைகள் தமிழ் மக்களுக்கு வழங்கப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.மக்களை முட்டாள்கள் ஆக்கநினைக்கும் அரியநேத்திரன் பொன்றவர்கள் வடக்கும் கிழக்கும் இனைந்த மாநிலம் .மாநில சுய ஆட்சி. தேசியரானுவம் 13 சட்டத்திற்குள்  அடங்கியது தெரிந்தும்  அடக்கியது யார் ....அரியநேத்திரன் பொன்றவர்கள் மக்களூக்கு பதில் கூறூவார்களா.                           

Aucun commentaire:

Enregistrer un commentaire